Sunday, May 12, 2013

நீரிழிவு தவறான எண்ணங்களும் மேற்கொண்டு செய்ய வேண்டியவையும்

தவறான எண்ணங்கள்
நீரிழிவு நோயின் அறிகுறிகள் பற்றி பலரும் தவறான கருத்துக்களைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது
• எனக்குப் புண்கள் விரைவாக ஆறிவிடுகின்றது
• எனக்குத் தண்ணீர் விடாய் இல்லை.
• எனக்கு அடிக்கடி சிறுநீர் போவதில்லை.
• எனக்குத் தலைச்சுற்றுக் கிடையாது
• எனக்கு களைப்புக் கிடையாது
எனவே எனக்கு நீரிழிவு இருக்காது எனப் பலரும் தாமாகவே முடிவு கட்டுகின்றனர்.
இது தவறான கருத்தாகும். நீரிழிவின் ஆரம்ப நிலையில் பெரும்பாலனவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை. ஆனால் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதற்கிடையிலேயே இருதயம், இரத்தக் குழாய்கள், நரம்புகள், மூளை போன்றவற்றில் தாக்கங்கள் ஆரம்பித்து விடுகின்றன. இவற்றினால்தான் பிற்காலத்தில் பக்கவாதம், மாரடைப்பு, கால் விறைப்பு, சிறுநீரகம் பழுதடைதல், மாறாத கால் புண்கள், கால்களை சத்திர சிகிச்சை மூலம் அகற்றல் போன்ற பாரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மறைந்திருக்கும் நோய்
இந் நோயின் மிக ஆபத்தான அம்சம் என்னவெனில் மிகப் பெருந்தொகையான மக்கள் தமக்கு நீரிழிவு இருப்பதை அறியாமல் இருக்கிறார்கள் என்பதுதான். சுமார் 50 சதவிகிதமானவர்கள் தமக்கு நீரிழிவு இருப்பதை அறியால் இருக்கிறார்கள் எனக் கணிப்பீடுகள் கூறுகின்றன. மிகத் தாமதமாக, அதுவும் தமக்கு அந் நோயின் பின் விளைவுகள் வந்த பின்னரே பெரும்பாலானவர்கள் தம்நோயைக் கண்டறிகின்றனர். இதற்குக் காரணம் நீரிழிவு நோய் பற்றிய மேற் கூறிய தவறான எண்ணங்களே.

எனவே அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியும் வரை காத்திருப்பது மூடத்தனமானதாகும்.
• இரத்தப் பரிசோதனை செய்வதன் மூலமே நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். பலவிதமான இரத்தப் பரிசோதனைகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனையுடன் தமக்கேற்றதைச் செய்து கொள்ளலாம்.
• சிறுநீர்ப் பரிசோதனை செய்வது இந்நோயைக் கண்டறிவதற்கான நம்பிக்கையான முறையல்ல என்பதால் பெரும்பாலும் செய்யப்படுவதில்லை.
யாருக்கு இரத்தப் பரிசோதனை அவசியம்
மருத்துவர்கள் வேறு நோய்களுக்காக அவரிடம் செல்லும் போதும் பிரஸரை அளந்து பார்க்கிறார்கள். அதே போல தமக்கு சந்தேகம் உள்ள பலரையும் சீனிக்கான இரத்தப் பரிசோதனை செய்யும்படி வேண்டுகின்றனர். இவ்வாறு இரத்தத்தில் சீனிப் பரிசோதனை செய்வது பல காரணங்களுக்காக இருக்கக் கூடும்.
மருத்துவரிடம் செல்லாதபோதும், உங்கள் இரத்தத்தில் சீனியின் அளவு சரியாக இருக்கிறதா, அதிகரித்திருகிறதா என அறியப் பரிசோதனை செய்ய வேண்டும் முக்கியமான கீழ்க் கண்டுள்ளவர்கள் குருதியில் தமது சீனியின் அளவைச் செய்தறிவது அவசியமாகும்.
• பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டும்.
• கொழுத்த உடல்வாகு உள்ளவர்களும் கட்டாயம் செய்ய வேண்டும். எடையானது உயரத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இதை உடற் திணிவு அலகு குறிப்பிடுவார்கள். ஆங்கிலத்தில் Body Mass index (BMI) ஆகும். இது இலங்கை போன்ற தெற்காசிய நாட்டவர்களுக்கு 23ற்குள் இருக்க வேண்டும். 25 மேற்பட்டவர்கள் செய்து கொள்வது விரும்பத்தக்கது.
• தொந்தியான வயிறுள்ளவர்களும் செய்ய வேண்டும்.
• தமது குடும்பதில் நீரிழிவு உள்ளவர்கள். பெற்றோர், சகோதரர்கள் போன்றவரிடையே நீரிழிவு உள்ளவர்களுக்கு அது வருவதற்கான சாத்தியம் அதிகம். எனவே அவர்களுக்கும் அவசியமாகும்.
• உடல் உழைப்பற்ற, வாழ்க்கை முறையுள்ளவர்கள்
உலகளாவிய ரீதியில் பாதிப்பு அதிகமுள்ள நோய்
இன்றைய கால கட்டத்தில் நீரிழிவு நோயின் பாதிப்பு மிக அதிகமாக இருப்பது மாத்திரமின்றி வேகமாக அதிகரித்தும் வருகிறது. உலகளாவிய ரீதியில் 350 மில்லியன் மக்கள் இந்நோயால் பீடிக்கபட்டிருக்கின்றனர்.
இந்நோயின் பாதிப்பால் மரணத்துக்கு ஆளாபவர்கள் தொகை பயமுறுத்துவதாக இருக்கிறது. 2004 ம் ஆண்டு கிடைத்த தகவல்களின் பிரகாரம் சுமார் 3.5 மில்லியன் மக்கள் இந்நோயின் தாக்கத்தால் மரணத்தைத் தழுவினர். 8 வருடங்கள் கழிந்த நிலையில் இன்று அது இரு மடங்காக அதிகரித்து இருக்கலாம்.
இலங்கையில் இருபது வயதிற்கு மேற்பட்டவர்களை எடுத்துக் கொண்டால் பத்து சதவிகிதத்தினர் (10.3%) இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. நகர்ப்புற மக்கள், கிராமப் புற மக்கள் என வேறுபாடின்றி அனைவரையும் பாதித்து வருகின்ற போதும் நகர்பபுறத்தில்
16.4% சதவிகிதமாக இருக்கின்ற அதே நேரம் கிராமப்புறங்களில்
8.7% சதவிகதமாக இருக்கிறது. நகரப்புற மக்களில் சற்று அதிகமாக இருப்பற்குக் காரணம்; அவர்களது வாழ்க்கை முறைகள்தான்.
நீரிழிவு ஏன் அதிகமானவர்களைப் பாதிக்கிறது

• போதிய உடலுழைப்பில் ஈடுபட முடியாமல் இருப்பதும்
• தவறான உணவு முறைகளும்
• கடைகளில் விற்கும் திடீர் உணவுகளை (குயளவ குழழனள) அதிகளில் உண்பதும் முக்கிய காரணங்களாகும்.
எண்ணெயில் பொரித்ததும், அதிகளவு மாச்சத்து, இனிப்புச் சத்து, உப்பு ஆகியன கொண்ட அத்தகைய குப்பை உணவுகளாவன
• நீரிழிவு நோயை மட்டுமின்றி கொலஸ்டரோல்,
• பிரஷர்,
• பக்கவாதம்,
• மாரடைப்பு போன்ற இருதய நோய்கள்,
• சிறுநீரக செயலிழப்பு,
• புற்றுநோய்
போன்ற பலவற்றையும் கொண்டு வருகின்றன என்பதை நாம் உணர வேண்டும்.
இன்று கிராமப் புற மக்களின் உணவு முறைகளிலும் இத்தகைய தவறான உணவுப் பழக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் அவர்களிலும் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிக்கும் சாத்தியம் அதிகரி;கிறது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை யாவரும் கடைப்பிடிப்பது அவசியம்.
நீரிழிவாளரின் உணவு
நீரிழிவாளர்கள் எத்தகைய உணவை உண்ண வேண்டும்? எவ்வளவு உண்ண வேண்டும்? இவைதான் நீரிழிவாளவர்கள் அறிய விரும்புகிற முக்கிய விடயமாக இருக்கிறது. ஆனால் இன்றைய நிலையில் நீரிழிவாளர்களுக்கு எனத் தனியான உணவுத் திட்டம் என எதுவுமே கிடையாது எனச் சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படவீர்கள். ஆனால் அதுதான் உண்மை.
காலாவதியான கருத்து
‘நீரிழிவாளர்கள் சீனி சேர்க்கக் கூடாது. சோறைத் தவிர்க்க வேண்டும். அரிசி கோதுமை ஆகிய மாப் பொருள்களால் செய்யப்படும் இடியப்பம், பிட்டு, இப்பம், நாடில்ஸ் போன்ற சிற்றுண்டிகளை குறைந்தளவே உண்ண வேண்டும்’ என்பதே பெரும்பாலான நோயாளர்களின் எண்ணமாக இருக்கிறது.
பல மருந்துவர்களும் இதையே நோயாளர்களுக்கு ஆலோசனையாகக் கூறுகிறார்கள்.
தற்போதைய கருத்து
இப்பொழுது உலகளாவிய ரீதியில் மருத்துவர்களாலும், உலக சுகாதார ஸ்தாபனம் போன்றவற்றாலும் சிபார்சு செய்யப்படும் உணவுமுறை என்ன சொல்கிறது?
• கொழுப்பு, சீனி, உப்பு ஆகியன குறைந்தளவும்.
• பழங்களும் காய்கறிகளும் அதிகம் கொண்டதுமான
• ஆரோக்கியமான சமவலுவுள்ள (டியடயnஉநன)உணவையே ஆகும்.
• எதையும் முற்றாகத் தவிர்க்கச் சொல்லவில்லை என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.
எதையும் முற்றாகத் தவிர்க்கச் சொல்லவில்லை என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.
கொழுப்பு என்றால் என்ன? எண்ணெய், பட்டர், மார்ஜரின் போன்ற அனைத்துக் பொருள்களும், அவை சார்ந்த உணவுகளாகும். சீனி கூடத் தவிர்க்கப்படவேண்டும் என்று சொல்லப்படவில்லை. ஆனால் அவற்றை உணர்வுபூர்வமாக அணுகாது, புத்திபூர்வமாக அளவோடு உணவில் சேர்க்கலாம்.
பொதுவான ஏனைய ஆலோசனைகள் என்ன?
• உணவில் மாப்பொருள் உணவு பெரும்பகுதியாக இருக்க வேண்டும். மாப்பொருள் உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது கிளைசீமிக் இன்டெக்ஸ் (டுழற புஐ) குறைவான உணவுகள் முக்கிய இடம் பெறுவது நல்லது. கிளைசீமிக் இன்டெக்ஸ் என்பது குறிப்பிட்டளவு ஒரு உணவை தனியாக உண்ணும்போது சீனியின் அளவு எவ்வளவு அதிகரிக்கிறது என்பதை பற்றிய ஒரு கணக்கீடு ஆகும்.
• கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமுள்ள உணவுவகைளைத் தவிர்க்கவும். அதிலும் முக்கியமாக பிரதான உணவுகளுக்கு இடையேயான குறுந்தினிகளுக்கு தவிர்ப்து நல்லது. அவற்றிற்குப் பதிலாக ஒரு பழம் சாப்பிடலாமே.
• காலை உணவை ஒருபோதும் தவிர்க்க வேண்டாம்.
• உணவுகளை வேளைக்கு வேளை சாப்பிட வேண்டும். உணவுகளைத் தப்ப விடுவது கூடாது. விரதம் இருப்பது கூடாது.
• எண்ணெய், நெய், பட்டர், மார்ஜரின் போன்றவற்றை உண்பதில் அவதானம் தேவை. ஹைரஸன் ஏற்றப்பட்ட மார்ஜரின் வகைகள் கூடாது. ஒலிவ் ஓயில், சூரியகாந்தி எண்ணெய், சோள எண்ணெய், நல்லெண்ணய் போன்றவை நல்லது, ஆயினும் தேங்காய் எண்ணெய், பாம் எண்ணெய் தவிர்க்பட்ட வேண்டியது அல்ல. அளவோடு உண்ணலாம்.
• ஒரு முறை பொரித்த எண்ணெயை வீசிவிட வேண்டும். மீண்டும் மீண்டும் அதே எண்ணெயை உபயேபகிக்கக் கூடாது.
• பால் அருந்தும்போது கொழுப்பு குறைந்த அளவுள்ள பாலைத் தேர்ந்தெடுங்கள். யோகர்ட் போன்றவற்றை உண்ணும்போதும் அவ்வாறே குறைந்த கொழுப்புள்ளதையே தேர்ந்தெடுக்கவும்.
• பொரித்த, பேக் பண்ணப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.
• துரித உணவுகளைத் (Fast food) தவிருங்கள். கட்லட், ரோல்ஸ், பிட்ஸா, சமோசா, ஹம்பேகர், பிரன்ஸ் ப்ரை, பிஸ்கற், வடை, சூசியம், சொக்லற் கேக், வனிலா கேக் போன்ற பலவும் அடங்கும்.
• இறைச்சியைத் தேர்ந்தெடுக்கும்போது கொழுப்பு குறைந்தவற்றையே உண்ணுங்கள். ஆடு, மாடு, பன்றி போன்றவற்றிக்கு பதிலாக கோழி உண்ணலாம். அதிலும் கொழுப்புள்ள பகுதியை நீக்குங்கள்.
• மதுபானம் அதிகம் கூடாது. இனிப்புள்ள மென் பானங்கள் கூடாது. ஆனால் போதிய நீராகாரம் எடுங்கள்.

No comments:

Post a Comment