Friday, June 14, 2013

எந்த கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்-- இயற்கை மருத்துவம்

கொத்தமல்லி கீரை: மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.

அரைக்கீரை: நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

வள்ளாரை: நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை: மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை: பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கன்னி: இரத்தம் விருத்தியாகும்.

தர்ப்பைப் புல்: இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை: மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை: பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.

சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை: இருமல் குணமாகும்

புதினா கீரை: மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

அறுகீரை: சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்

Tuesday, June 11, 2013

கோடைக்கு கொடையாகும் பழங்கள்

கோடை கடுமையானதுதான். ஆனால் அதற்கேற்பச் சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் கோடையின் கொடுமையில் இருந்து தப்பித்துவிட முடியும். அந்த வகையில் சில பழங்கள் நமக்குப் பெரிதும் கைகொடுக்கின்றன. அவை பற்றி… * தர்பூசணி: தற்போது எங்கும் கிடைக்கும் தர்பூசணி, தாகத்தைத் தணிக்கும். பசியைப் போக்கும். வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்தச் சூட்டை விரட்டும். வயிறு எரிச்சல், அடி வயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரிசெய்யும். சிறு நீரகக் கோளாறுகள், சிறுநீர்ப்பைக் கற்கள் சேருவதைத் தடுக்கும் மருந்தாக உதவும். உடலுக்குக் குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தரும்.
* ஆரஞ்சு: பசியைத் தூண்டவும், ரத்தத்தைச் சுத்திகரிக்கவும், பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் பயன்படுகிறது. ஆரஞ்சை ஆயுர்வேத வைத்திய முறை பெரிதும் பயன்படுத்துகிறது. ஆரஞ்சு வாயைச் சுத்தமாக்குகிறது. காய்ச்சலுக்கும் அருமருந்து. அடிவயிற்று வலியைக் குறைக்கும். குடற்புழுக்களை அழிக்கும். எலும்புகளை வலுப்படுத்தும். ஆஸ்துமா மற்றும் நெஞ்சக நோயாளிகளுக்கு ஆரஞ்சு நல்லது.
* சாத்துக்குடி: குளிர்ச்சியான, இனிப்பான, சுவையான பழம் சாத்துக்குடி. தாகத்தைத் தணிக்கும். வீரியத்தைக் கூட்டும். வயிற்றுப் பொருமல், வாயு, இருமல், வாந்தி, தண்ணீரற்றுப் போகும் வறட்சிநிலை, ரத்தத்தில் கழிவுப்பொருட்கள் சேருதல், செரிமானமின்மை போன்ற கோளாறுகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது.
வயிற்றில் அமிலத்தன்மை சேருவதை இதில் உள்ள காரத்தன்மை குறைத்து, வயிற்று எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகம் கொண் சளியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், சாத்துக்குடியின் சாறை வெந்நீரில் கலந்து அல்லது இஞ்சிச் சாறுடன் சேர்த்துக் குடித்தால் நல்ல பலனிருக்கும்.
காய்ச்சலின்போது வெறுமனே சாத்துக்குடி சாறைக் குடித்தாலே போதும். உடலுக்கு வேண்டிய சக்தி கிடைத்துவிடும். அமிலத்தன்மையைத் தணித்து, பசியை உண்டாக்கும். செரிமானக் கோளாறுகளை வேகமாகப் போக்கும்.
* வெள்ளரிக்காய்: வெள்ளரியில் பிஞ்சாகவும், காயாகவும் இரண்டு வகையுண்டு. வெள்ளரியும் நல்ல நீரிளக்கி. செரிமானத்துக்கு உதவுவது. வெள்ளரிப்பிஞ்சு பித்தத்தைத் தணித்து குடல்களுக்குக் குளிர்ச்சியூட்டுகிறது. சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. நெஞ்செரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது.

தலை சுற்றலைத் தடுக்கிறது. வெள்ளரி, மூட்டுவலி வீக்க நோய்களையும் குணமாக்குகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கோடையில் நாம் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறி வெள்ளரி.   

கறிவேப்பிலை

சமையல் சுவையைக் கூட்ட உதவும் கறிவேப்பிலை கடைகளில் காய்கறி வாங்கும் போது கொசுறாகவும் கிடைப்பதாலோ என்னவோ அதன் அருமை பெருமை பலருக்கும் தெரிவதில்லை. உணவுச் செரிமானத்துக்கு ஓர் உன்னதமான பொருளாக விளங்குகிறது கறிவேப்பிலை. 


வைட்டமின் ஏ சுண்ணாம்பு சத்து போலிக் ஆசிட் போன்றவை இதில் நிரம்பி உள்ளன. இரும்புச்சத்தை மிகைப்படுத்தி உடலுக்கு உறுதியைக் கொடுக்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புத்தாது அடர்த்திக் குறைவு நோய் முதுமைப் பருவத்தில் வருவதைத் தடுக்கிறது. 


கெட்ட கொழுப்பை கரைத்து பட்டழகை கொடுக்கிறது. பூச்சிக்கடி ஒவ்வாமையால் தோலில் ஏற்படும் அரிப்பைத் தணிக்கிறது.இதிலுள்ள பி- கரோட்டீன் உடல் உள் இயக்கத்தை சீர்படுத்துகிறது. கண் பார்வை கூர்மைக்கும் தலைமுடி கருகருவென அடர்த்தியாக வளரவும் கறிவேப்பிலை சிறந்த மூலிகை போன்று செய்லபடுகிறது. 


இளநரையை கட்டுப்படுத்துகிறது. இதன் இலைகளை அரைத்து தலைக்குத் தேய்க்கும் எண்ணெயில் கலந்து காய்ந்து பயன்படுத்துவதும நல்ல பலனைத் தரும். நீரிழிவுநோய் உள்ளவர்கள் கறிவேப்பிலையை பச்சையாக மென்று தின்றால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். 


இலையை காய வைத்து அரைத்து பொடியாக தயார்செய்து தண்ணீரில் கலந்தும் பருகலாம். தன் மருத்துவக் குணங்களால் வெளிநாட்டினர் மருத்துவக் குணங்களால் வெளிநாட்டினர் வியக்கும். 


இந்தியாவில் உள்ள சிறந்த மூலிகை வகைகளில் வேப்பிலையுடன் கறிவேப்பிலையும் பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. இதன் பூர்வீகம் தென் இந்தியா என்பது பெருமைக்குரியது.

Thursday, May 16, 2013

சக்கரங்கள்


மனித உடல் கண்களுக்கு புலனாகும் ஸ்தூல சரீரம் மற்றும் புலனாகாத சூக்கும சரீரமும் கொண்டது. சக்கரங்கள் என்பவை மனித உடலின் சூக்கும சரீரத்தில் அமைந்த சக்தி மையங்களாகும். இவை மொத்தம் ஏழு, அவை மூலாதாரம், சுவாதிஷ்டானம், ம்ணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, சகஸ்ரதளம் என்பவை ஆகும். இது முதுகெலும்புத்தண்டின் கீழிருந்து மேல் நோக்கி நெடுகிலும் வரிசையாக அமைந்துள்ளது. இந்த சக்கரங்கள் உண்மையில் ஸ்தூல உடலில் கிடையாது, ஆனால் சூக்கும உடலில் உண்டு.

மனிதனின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் இந்த சக்கரங்கள் கட்டுப்படுத்துகின்றன. இது ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான தன்மைகளையும், உணர்வுகளையும் மனதுக்கும்,உடலுக்கும் அளிக்கக்கூடியவையாகும்.

இந்த அதிசய சக்கரங்களைப் பற்றி பார்ப்போம்,

ஒவ்வொரு சக்கரமும் தாமரை வடிவினைக்கொண்டவை, சாதாரணமாக மலராத நிலையில் உள்ளன, யோகப் பயிற்சியின் மூலம் குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இவை மலர்கின்றன.

ஒவ்வொரு சக்கரத்திற்கும் பல இதழ்கள் உண்டு. இந்த இதழ்களின் எண்ணிக்கை ஆரம்ப நிலையிலிருந்து, அதாவது மூலாதாரத்திலிருந்து படிப்படியாக மோல்நோக்கி அதிகரிக்கும். ஒவ்வொரு சக்கரங்கத்திற்க்கும் ஒரு ஆண் தெய்வம், மந்திரம், நிறம் ஆகியவை உண்டு. மேலும் சக்கரத்திலுள்ள தாமரையின் ஒவ்வொரு இதழுக்கும் ஒரு மந்திர எழுத்து இருக்கிறது. பஞ்ச பூதங்களான நிலம்,நீர்,காற்று,நெருப்பு மற்றும் ஆகாயம் இவற்றுடன் ஒவவொறு சக்கரமும் தொடர்பு கொண்டுள்ளது.

இவ்வாறு ஆண் தன்மையுடைய இச்சக்கரத்தில் பெண் வடிவாகிய குண்டலினி சக்தியானது பாயும்போது அதன் பெயர் சக்கரத்திற்கு ஏற்றார்போல் மாறுபடுகின்றது.அதுவே ஒவ்வொரு சக்கரத்தின் பெண் தெய்வமாகும். ஆண் வடிவாகிய சக்கரத்தில் பெண் வடிவாகிய குண்டலினி சக்தியானது சேர்ந்து உடலுக்கும், மனதுக்கும் புதிய சக்திகளையும், மாற்றங்களையும் தருகின்றன. இதுவே யோகத்தினால் கிடைக்கும் பயன் ஆகும்.

சூக்கும உடலில் காணப்படும் இந்த சக்கரத்தின் இருப்பிடங்களை ஸ்தூல உடலுடன் தொடர்பு படுத்தி தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். அப்போதுதான் மிகச்சரியாக குண்டலினி யோக தியானத்தினை பிழையின்றி செய்யமுடியும்.

ஆண்களுக்கு மூத்திரத்துவாரத்துக்கும் மலத்துவாரத்துக்கும் உள்ள இடைவெளியிலும், பெண்களுக்கு பெண்குறியின் உட்புறம் கருப்பைவாசல் அருகிலும் மூலாதாரச்சக்கரமானது அமைந்துள்ளது.

மூலாதாரச்சக்கரத்திற்கு சற்று ஏற்புறமாக,சுமார் நான்கு விரல் மேலே சுவாதிஷ்டானம் உள்ளது.

மூன்றாவது சக்கரமான ம்ணிபூரகம் நாபியின் பின்னே முதுகுத்தண்டில் அமைந்துள்ளது.

இதன் பின்னால் இதயத்துக்கு நேர் பின்புறம் முதுகுத்தண்டில் அநாகத சக்கரமானது அமைந்துள்ளது.

விசுக்தி சக்கரம் மைய கழுத்துக்குப் பின்னால் அதே முதுகுத்தண்டில் அமைந்துள்ளது.

ஆக்ஞை சக்கரம் முதுகுத்தண்டின் உச்சியில், இரு புருவங்களுக்கும் இடையே நேர் பின்புறம் அமந்துள்ளது.

கடைசியில் சகஸ்ரதளமானது தலையின் மேற்புறம் கவிழ்ந்த நிலையில் ஆயிரம் இதழ்களுடன் காணப்படுகிறது.

மேலும் மூலாதாரமானது நிலத்துடனும், சுவாதிஷ்டானம் நீருடனும், மணிபூரகம் காற்றுடனும், அநாகதம் நெருப்புடனும், விசுக்தி ஆகாயத்துடனும் தொடர்பு கொண்டுள்ளன.

வொர்க் அவுட்ஸ் - சில தவறான கருத்துக்களும் விளக்கங்களும்....


தொந்தியைக் குறைப்பதற்கு சிறந்த வழி நமது வயிற்றுப் பகுதிக்கு அதிக பயிற்சி கொடுக்க வேண்டும்.

இது ஒரு தவறான கருத்து. நம்மில் பலர் எந்த இடத்தில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை. இப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்து தொந்தி குறையும்.

வாரத்துக்கு இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்தாலே நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு போதுமானது.

இதுவும் தவறான கருத்து. எப்படி விட்டமின்கள் நமது உடலுக்கு தினசரி தேவையோ, அதுபோல மிதமான உடற்பயிற்சியும், நமக்கு தினசரி தேவை. ஏனென்றால், உடற்பயிற்சிகளால் ஏற்படும் நல்ல மாற்றங்களை 48 முதல் 72 மணி நேரங்கள் வரைதான் நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆகவே நமது தசைகளும், அவற்றுடன் தொடர்புடைய நமது இரத்த, சுவாச, செரிமான உறுப்புகளும் உறுதியாகவும், நல்ல நிலையில் இயங்க குறைந்தது வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

எடையைக் குறைப்பதற்கு வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இதுவும் ஒரு தவறான கருத்து. வியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மட்டுமே உதவும். அது நமது எடையைக் குறைக்க உதவாது. வேர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும். இதை விடுத்து உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாக பயிற்சிக் கொடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

Sunday, May 12, 2013

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை


காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். எண்ணெ...
ய்த்துளி பாம்புபோல ளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய், முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப நோய், எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும். எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.

புல்லாமணக்கு மூலிகை வசியம் ( Pullamanakku herbal Vasiyam )..!


சித்தர்கள் கண்டறிந்த அபூர்வ வகை மூலிகைகளில் ஒன்றுதான் "புல்லாமணக்கு"எனும் மூலிகையாகும். இது பல்வேறு வகையான வசியம் செய்ய உதவுகின்றது.

இம் மூலிகையினைக் கொண்டு ஆண் வசியம், பெண் வசியம், தூப (புகை)வசியம், வசிய மை, வசிய ஈடு,-ஈடு மருந்து முறிவு,போன்ற ஏராளமான வசிய வேலைகளுக்கு மாந்திரீகவாதிகள் காலம் காலமாக "பரம ரகசியமாக"கையாண்டு வருகின்றனர்.

இன்றும் கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் இதனைப் பயன்படுத்துபவர்கள் பரவலாக உள்ளனர்.

இம்மூலிகையின் பயன்பாடுகள் பற்றி சித்தர் நூல்கள், மாந்திரீகம், மாயாஜால வித்தைகள் போன்ற நூல்களில் உள்ளது. என்றாலும் இதனை அனுபவ முறையில் கையாண்டு வெற்றி பெற நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு குருவின் வழிகாட்டுதல் கண்டிப்பாகத் தேவை.

இதனை அனைவரும் அறிந்து கொள்ளும் ஒரு அரிய தகவலாகவே பதிவு செய்கின்றோம். மேலும் இம்முறைகளை கையாள விரும்புபவர்கள் சுயநலத்திற்கு என்றில்லாமல் பொது நலத்தையும் அறிந்து பயன்படுத்த வேண்டுகிறோம்.

வசிய தூபம் முறை

1-நிலம்புரண்டி வேர்
2-புல்லாமணக்கு கிழங்கு
3-தொட்டால் வாடி வேர்
4-தொட்டால் சுருங்கி வேர்

இவைகளை அம்மியில் இட்டு "பேய் கரும்பு"சாறு விட்டு 5-மணி நேரம் அரைத்து கடலை பிரமாணம் அளவு உருட்டி காய வைத்து பாட்டலில் பதனம் செய்யவும். இதை வேண்டும் போது ஒரு உருண்டை எடுத்து சாம்பிராணி கொஞ்சம் சேர்த்து தூபமாக (புகையாக)போட்டால் புகை பட்டவர்கள் எல்லாம் வசியமாவர்கள்.

ஆண் பெண் வசிய ஈடு

1-சுழல் வண்டு -4
2 -குளியானை -3
3 -இந்திரகோபம் -10
4 -புல்லாமணக்கு கிழங்கு -5
5 -கோவை விதை -10
6 -பொன்னூமத்தை விதை -30
7 -தகரை விதை -10
8 -தொட்டால் வாடி வேர் -3
9 -மருளூமத்தை விதை -5

இவைகளை அம்மியில் இட்டு பேய்க் கரும்புச் சாறு விட்டு 10-மணி நேரம் அரைத்து குன்றிமணி பிரமாணம் குளிகை செய்து உலர்த்தி ஒரு பாட்டலில் பதனம் செய்யவும். வேண்டும் போது ஒரு குளிகை எடுத்து தனது ரத்தம் சேர்த்து தின் பண்டங்களில் கலந்து கொடுக்க வசியம் ஆவர். இணை பிரியாத தம்பதிகளாவார்கள்.

வசிய ஈடு மருந்து முறிவு

சுயநலத்தின் காரணமாக ஒருவரின் பிடியில் வசிய மருந்தினால் உள்ளஒருவரை அதன் பிடியிலிருந்து மீட்டுக் கொண்டுவரவும் இம் மூலிகை "புல்லாமணக்கு" உதவுகின்றது.

புல்லாமணக்கு கிழங்கு மூன்று எடுத்து நெய் விட்டு வறுத்து உண்ணவும். இது போல் மூன்று நாள் காலை மாலை ஆறு வேளை சாப்பிட ஈடு மருந்தின் வேகம் முறிந்து தனது சுயநிலையை அடைவார்கள்.