Thursday, August 22, 2013
Monday, August 19, 2013
இணை தேர்வு வழிமுறை
காலுக்குச் சரியான அளவில் செருப்பைத் தேர்வு செய்ய வேண்டும். சிறியதாக
இருந்தால் காலில் புண் ஏற்படும். பெரியதாக இருந்தால் நடக்க முடியாது.
அதுபோல் காமசுகம் அடைவதற்கு ஆண் அல்லது பெண் தனக்கு தகுந்த சரியான இணையை
தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தேர்ந்தெடுக்க சில
வழிமுறைகளையும் சொல்லியிருக்கிறார் வாத்ஸ்யாயனர்.
1. இருவரும் ஒரே நிலையில் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்
2. ஆணை விட பெண்ணுக்கு மூன்று வயது வரை குறைவாக இருக்க வேண்டும்.
3. தலைமுடி, நகம், காதுகள், பாதங்கள் போன்றவற்றை முறைப்படி பராமரிப்பவராக இருக்க வேண்டும்.
4. மணந்து கொள்ளும் முன் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்றாக பார்த்து அறிந்து புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
5. முதல் பார்வையிலேயே பிடிக்காதவர்களை இணைத்துவைக்க குடும்பத்தினர் முயற்சிக்க கூடாது.
6. ஆணை விரும்புவதை பெண் சொல்லமாட்டாள் என்றாலும் கடைக்கண் பார்வை, கன்னம் சிவத்தல், புளகாங்கிதம் அடைதல், பேச்சில் தெரியும் இனிமை, குழைவு போன்றவற்றில் இருந்து அறிந்துகொள்ள முடியும்.
7. மனதுக்கு பிடித்த ஆணின் அருகே இருக்க விரும்பி ஏதாவது காரணத்துக்காக அந்த இடத்தையே சுற்றி சுற்றி வருவாள்.
8. நல்ல ஆடை அணியாத நேரத்தில் மனம் விரும்பிய ஆணின் முன் வர விரும்பமாட்டாள்.
9. பனக்காரன் என்பதற்காக யாரோ ஒருவனுக்கு பெண்ணை மணமுடித்து வைக்கக் கூடாது.
10. சந்தேகப்படுபவர்களும் அடிக்கடி வெளியுர் பயணம் செய்பவர்களும் யாருக்கும் நல்ல துணையாக இருக்க முடியாது.

Thursday, August 8, 2013
சிறு நீரகக் கல்
இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப் படும் ஒரு
விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில்
சிக்கி அவதிப்படுகின்றனர்.இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை! ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!
அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல்சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.
சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளன வாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.
பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.
எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி (Lemonade therapy) என்று பெயர்.
தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீ ரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.
இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது.
சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.
பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டு தான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.
சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?
சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம்.
இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், "கால்சியம் வகைக் கற்கள்
சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு
வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும்.
அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில்
வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.
இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.
ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் - ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.
கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச்
சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ்
நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட் ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laserlithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.
இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.
ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத் தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்" என்கிறார் ரோஜர் சர்.
சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தெரபியை முயற்சித்துப் பாருங்களேன்.
Sunday, July 28, 2013
துணையை 'தூக்கி' விளையாடுங்கள்...
உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..!
சினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும், காதலியரும்தான் ஹீரோயின்கள். எனவே இவர்களும் கூட இப்படித் தூக்கி தூக்கி விளையாடலாம். தப்பே இல்லை காதலிலும், காமத்திலும் அன்னியோன்யத்திற்கு நிறைய முக்கியத்துவம் உண்டு. உடல் ஸ்பரிசமும், உள்ளக் கிளர்ச்சியும் இங்கு கொளுந்து விட்டு எரியும்போது உடலும், உள்ளமும் ஒரு சேர சந்தோஷப்படும்.
செக்ஸ் உறவின்போதும், ஜாலியான மன நிலையில் இருக்கும்போதும் பெண்களை ஆண்கள் தூக்குவது என்பது ரொம்ப வித்தியாசமானதாக இருக்கும். மற்ற நேரத்தி்ல் மனைவி அல்லது காதலியைத் தூக்க சிரமப்படும் ஆட்கள் கூட அந்த சமயத்தில் ஒரே தூக்காக தூக்கி விடுவார்கள்.
அப்போது அந்தப் பெண்கள் படும் சந்தோஷம் இருக்கே.. சொல்லி மாள முடியாது. தூக்குவதில் என்ன சந்தோஷம் இருக்கிறது என்பது தெரியவில்லை. இதுகுறித்து விஞ்ஞானப்பூர்வமாகவும் எதுவும் கூறப்பட்டதாக தெரியவில்லை. பெரும்பாலும் செக்ஸ் உறவு சமயத்தில்தான் இப்படி தூக்கி விளையாடுவதை அதிகம் செய்கிறார்கள் ஆண்கள். இப்படி செய்வதால் அந்தப் பெண்களுக்கு, தங்களது துணைவர்கள் மீது நிறைய மதிப்பும், ஆசையும் பெருகுகிறதாம். நம்மாளு நல்லா ஸ்டிராங்காதன் இருக்காரு என்று அவர்களுக்கு பெருமையாகவும் இருக்குமாம்.
இதனால்தான் தங்களைத் தூக்கும் கணவர் அல்லது காதலரை பெண்கள் ரசிக்கிறார்களாம். இப்படித் தூக்கி விளையாடுவது ஆண்களின் உரிமை இல்லை, பெண்களும் கூட இதைச் செய்யலாம். சரி தூக்குவது என்று முடிவான பின்னர் அதை எப்படிச் செய்யலாம் இதிலும் கலை நயத்தைப் புகுத்துங்களேன்..
உங்களால் எளிதில் தூக்க முடியும் என்று தோன்றினால் ஏதாவது சின்னதாக ஒரு ரொமான்ஸ் கவிதையை சொல்லியபடியே தூக்குங்குள். அப்படியே ரூமுக்குள் அல்லது வீட்டுக்குள் சின்னதாக ஒரு வலம் வாருங்கள். தூக்கிய நிலையி்ல் உதடுகளில் அழகாக ஒரு முத்தம் வையுங்கள், கண்களில் அழகாக முத்தமிடுங்கள், காதுகளில் சின்னதாக கிஸ் பண்ணுங்கள். சங்குக் கழுத்தில் சிக்கென்று ஒன்று வைத்து சிலிர்ப்ப்பூட்டுங்கள். கையில் தூக்கியிருக்கும்போது இடுப்பில் சின்னதாக விளையாட்டுக் காட்டுங்கள். மீன் போல அவர் துள்ளிக் குதிக்கும்போது மார்போடு கட்டி அணைத்து தாலாட்டுங்கள்.
தூக்கிய நிலையிலேயே அப்படியே ஏதாவது ஒரு டேபிளில் மெல்ல படுக்க வைத்து நீங்கள் அவர் மீது சாய்ந்து அப்படியே உள் வாங்கிக் கொண்டு உற்சாகமூட்டுங்கள் முத்த மழையால். பிறகு முக்கியமான விஷயம், முடிந்தவரை நல்ல திடமாக பாலன்ஸ் செய்து கொண்டு துணையை தூக்குவது நல்லது.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வாழைப்பூ சாப்பிடுங்க
ஊதா மொட்டுகளுடன் குழாய் போன்ற அமைப்பில் தோன்றும் வாழைப்பூவின் பூக்கள்
வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் பூக்களை ஊறிந்தால் தேன் போன்ற திரவம்
இருக்கும். வாழைப்பூவில் வைட்டமின் ஈ மற்றும் ஃபிளாவனாய்டுகளை அதிகம்
கொண்டுள்ளது. வாழைப்பூவில் புரதங்கள் மற்றும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள்
காணப்படுகிறது. பலரும் வாழைப்பூவை உணவுக்காக பயன்படுத்துகின்றனர். இது
நிறைய மருத்துவ பலன்களை கொண்டுள்ளது எனினும் விஞ்ஞானரீதியாக எந்த ஒரு
தவலும் இல்லை. ஆனாலும் இயற்கை மருத்துவத்தில் வாழைப்பூ பக்க விளைவுகளுக்கு
மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
நோய் தொற்று:
எத்தனால் நோய் தொற்று காரணமாக உருவாகும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை வாழைப்பூக்களின் சாறுகள் மூலம் தடுக்கலாம்.. வாழைப்பூவில் பேசில்லஸ் சப்ஸ்டில்ஸ், பேசில்லஸ் க்ரியூஸ் ஈஸ்செர்ச்சியா கோலி போன்றவைகளை கொண்டுள்ளதால் காயங்களை ஆற்றுவதற்கும் நோய் தொற்று, அலர்ஜி என அனைத்திற்கும் இது பயன்படுகிறது.
மாதவிடாய் இரத்தப்போக்கு
வீட்டு வைத்தியத்தில் சிறந்தது வாழைப்பூ. மாதவிடாய் கோளாறால் அவதிபடுபவர்களுக்கு வாழைப்பூ உதவுகிறது. ஒரு கப் சமைத்த வாழைப்பூவுடன் ஒரு கப் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாயின் போது அதிக ரத்த போக்கு ஏற்படாமல் பாதுகாக்கிறது. சமைத்த வாழைப்பூவுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதால் உடலில் புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிக்கிறது. அதன் மூலம் மிகையான மாதவிடாய் தொடர்புடைய இரத்தப்போக்கு குறைக்கிறது. பொதுவாக மாதவிடய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கிறது.
நீரிழிவு நோய்
வாழைப்பூவை தினமும் நாள் ஒன்றுக்கு 0.15 முதல் 0.25 கிராம் என வேகவைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். ஆண்டிமைக்ரோபயசின் செயல்பாடு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் என மருத்துவரீதியாக நிரூபிக்கபடவில்லை. இது வீட்டு மருத்துவத்தில் மட்டுமே பயன்படுத்தபடுகிறது.

ஆரோக்கிய இதயத்தை எப்படி பாதுகாக்கலாம்
இதய சுகாதாரம் என்பது மிகவும் அவசியம். இதயம் தான் நமது உடல் உள்ள அனைத்து
உறுப்புகளையும் பாதுகாத்துக்கொள்கிறது.. ஏனெனில் இருதய அமைப்பில்
அடங்கியுள்ள இதயம் மற்றும் இரத்த நாளங்கள் உடலை பராமரித்து ஆரோக்கியமாக
வாழ்வதற்கு முக்கியமானதாகும். ஆதலால் போதுமான உடற்பயிற்சியும், ஆரோக்கிய
உணவுகளும் இதய பாதுகாப்பிற்கு அவசியம். இதை கடைபிடித்தால் இதய நோயிலிருந்து
நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
உணவு கட்டுப்பாடு
உணவு கட்டுப்பாடு இதய ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் மயோ கிளினிக் நிறைவுற்ற மற்றும் கொழுப்பின் எல்லையை பரிந்துரைத்து இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. உயர் இரத்த கொழுப்பின் அளவு காரணமாக தமனியில் உள்ள பிளேக் கட்டமைப்பை அதிகரிப்பதால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுகிறது. குறைந்த கொழுப்புசத்துள்ள உணவுகளான மீன், கொழுப்பில்லா பால், பீன்ஸ், பட்டாணி மற்றும் பருப்பு, முட்டையில் வெள்ளைக்கரு போன்ற உணவு வகைகளை உட்கொள்ளலாம். பழங்கள், காய்கறிகள்,முழு தானியங்கள், ஃபைபர், போன்றவை இதய பாதுகாப்பிற்கான முக்கிய ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது.
எடை நிர்வாகம்
தோற்றத்தை கவனத்தில் கொண்டாலும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதில் கவனம் வேண்டும். உடல் பருமனாக இருந்தால் கரோனரி இதய நோய் மரணத்தை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக அமெரிக்கன் ஹார்ட் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது. 30 64 வயது வரை உள்ளவர்கள் குறிப்பாக எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.. பருமனான உடல் கொண்டவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், ட்ரைகிளிசரைடுகள், கெட்ட கொழுப்பு மற்றும், குறைவான ஹெச்டிஎல், போன்றவை இருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆதலால் சத்தான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமான எடை மற்றும் ஆரோக்கியமான மனதை பராமரிக்க வேண்டும்.
உடற்பயிற்சி
ஆரோக்கிய இதயத்திற்கு தினமும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் ரத்த ஒட்டமைப்பு மற்றும் தசைகள் வலுவடைகின்றது. நடைபயிற்சி, நெடுந்தூர நடை, ஜாகிங், சைக்கிளிங் மற்றும் நீச்சல் போன்றவை ஆரோக்கிய இதயத்தை மேம்படுத்த சிறந்த வழிகள். தினமும் செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகளான நாயுடன் நடைபயிற்சி, மாடிப்படி ஏறும் பயிற்சி, வெகுதொலைவில் இருக்கும் கடை, போன்றவைகளுக்காக உங்களது காரை பயன்படுத்துவதை விட்டு விட்டு உங்களது கால்களை பயன்படுத்துங்கள் இது ஆரோக்கிய இதயத்திற்கு சிறந்த பங்களிப்பாகும்.
வாழ்க்கை முறை
உங்கள் ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் இதயத்தை பாதுகாக்கும் வாழ்க்கை முறையை தேர்வு செய்யுங்கள். அமெரிக்க இதய சங்கம் புகைபிடிப்பது தான் இதய நோயிற்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளது. ஆதலால் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். கூடுதலாக புகைபிடிப்பதால் நுரையீரல் நோயை ஊக்குவித்து, தடிப்பு ஏற்படுவதன் மூலம் இதயம் பாதிப்படைகிறது. புகை பிடிப்பது பக்கவாதம், வெளிப்புற தமனி நோய், அயோர்டிக் குருதி நாள நெளிவு போன்ற ஆபத்தை ஏற்படுத்துகிறது.
ஆபத்து அறிகுறிகள்
அசெளகரியமான உணர்வு, மார்பு மையப்பகுதியில் அழுத்தம், முழுவதுமாக அழுத்தம் மற்றும் வலி, இரண்டு கைகளிலும் வலி, தாடை, கழுத்து அல்லது வயிறு போன்ற பகுதிகளில் அழுத்தத்துடன் கூடிய வலி ஏற்படும். , மூச்சுத்திணறல், குளிர்ந்த வியர்வை, குமட்டல், இலேசான மயக்கம், போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள். திடீரென ஏற்படும் ஸ்ட்ரோக், திடீர் உணர்வின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும்.

குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வேண்டாம்
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தலைமுறைப் பெண்களிடம்
குழந்தையின்மைப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வருகிறது. வாழ்க்கை
முறை, உணவுப்பழக்கம் எல்லாம் மாறிப் போனது ஒரு பக்கம் இருந்தாலும், குழந்தை
பெற்றுக் கொள்ளும் வயதைத் தள்ளிப் போடுவதும் பிரச்னைக்கான முக்கிய காரணம்
என்கிறார் பிரபல மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.
சினைப்பையில் உள்ள முட்டைகளின் இருப்பு குறைவதே காரணம் என்பவர், அதைப் பற்றி விளக்கமாகப் பேசுவதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வலியுறுத்துகிறார். ‘‘ஒரு பெண் குழந்தை, அம்மாவோட வயித்துல உருவாகிறப்பவே, அதோட சினைப்பைல இத்தனை மில்லியன் முட்டைகள் இருக்கணுங்கிறது தீர்மானிக்கப்படும்.
அந்தக் குழந்தை வயசுக்கு வர்றப்ப, லட்சக்கணக்குல உள்ள அந்த முட்டைகள், மாதவிலக்கு மூலமா மாசா மாசம் வெளியேறி, குறைஞ்சுக்கிட்டே வரும். பிரசவத்தின் போது இன்னும் குறையும். இப்படி குறைஞ்சுக்கிட்டே வந்து, ஒரு கட்டத்துல முழுக்க முட்டைகளே இல்லாமப் போகிறப்ப, மாதவிலக்கு வராது. அதைத்தான் மெனோபாஸ்னு சொல்றோம்.
சினைப்பையில முட்டைகள் உருவாகும்போதே கம்மியா இருந்தா, 30, 35 வயசுலயே பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கலாம். அதை ‘ப்ரீமெச்சூர் ஓவரியன் சின்ட்ரோம்’னு சொல்றோம். இந்தத் தலைமுறைப் பெண்கள், வேலை, சொந்த வீடு, வசதிகள்னு வாழ்க்கையில செட்டிலான பிறகுதான் கல்யாணம், குழந்தை பத்தி யோசிக்கிறாங்க. 30 வயசுல கல்யாணம் பண்ணிட்டு, 35 வயசுல மாதவிலக்கு சுழற்சி சரியில்லை, குழந்தை இல்லைன்னு சொல்லிட்டு, சிகிச்சைக்கு வருவாங்க.
டெஸ்ட் பண்ணிப் பார்த்தா, அது மெனோபாஸுக்கான அறிகுறியா இருக்கும். இன்னும் சில பெண்களுக்கு சின்ன வயசுல சினைப்பை கட்டிகள் வந்து, அதுக்காக ஆபரேஷன் செய்திருப்பாங்க. அதனாலயும் சினைப்பையில உள்ள முட்டைகளோட இருப்பு குறைஞ்சு, ‘ப்ரீமெச்சூர் ஓவரியன் சின்ட்ரோம்’ பிரச்னை வரலாம். இப்பவும் சின்னச் சின்ன கட்டிகளுக்கு ஆபரேஷன் பண்ணிக்கிட்டு, பாதி முட்டைகள் குறைஞ்ச நிலையில கிராமத்துலேருந்து வர்ற பெண்கள் ஏராளம்.
கட்டிகள் இருக்கிறது தெரிஞ்சா, கூடியவரைக்கும், அதை அறுவை சிகிச்சையில அகற்றாம, சினைப்பையைத் தொந்தரவு பண்ணாம குணப்படுத்த முயற்சி பண்றதுதான் பாதுகாப்பானது. அடுத்து, எக்ஸ் ரே போன்ற ரேடியேஷன் தொடர்பான துறைகள்ல வேலை செய்யற பெண்களுக்கும், சினைப்பை முட்டைகள் அழிய வாய்ப்புகள் அதிகம். அந்த அபாயம் தெரிஞ்சு, இந்தப் பெண்களும், திருமணத்தையும், குழந்தைப் பேற்றையும் தள்ளிப் போடாம இருக்கிறது நல்லது.
அம்மாவுக்கு இள வயதுலேயே மாதவிலக்கு நின்றிருந்தால், அவங்க பெண்கள் எச்சரிக்கையா இருக்கணும். உடனடியா மருத்துவரைப் பார்த்து, தேவைப்பட்டா, ஏ.எம்.ஹெச் என்ற ஹார்மோன் சோதனையை செய்து பார்த்து, கருத்தரிக்கும் திறனைத் தெரிஞ்சுக்கிட்டு, தகுந்த சிகிச்சைகளை எடுத்துக்கலாம். அலட்சியமா விட்டுட்டு, பிறகு குழந்தையின்மைக்காக, ஐ.வி.எஃப் மாதிரியான நவீன சிகிச்சைகளைத் தேடி ஓட வேண்டிய அவதிகளையும் இதன் மூலம் தவிர்க்கலாம்...’’ என்கிறார் டாக்டர் ஜெயராணி.

Subscribe to:
Posts (Atom)