Tuesday, July 16, 2013

செரிமானக் கோளாறை போக்கும் ஓமம்

ஓமம் (ajwain) உடலில்  ஏற்படும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த செடியின் அனைத்து பாகங்களும் யுனானி,  ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியமானதாக பெரிதும் பயன்படுகிறது.. ஓமத்தின் விதைகளை மசாலா பொருளாக சமைப்பதற்குபயன் படுத்துகின்றனர். மேலும் பிஸ்கட், சாஸ், ரசங்கள், குளிர்பானங்கள், ஊறுகாய் போன்றவற்றை தயார் செய்யும் போது இதனை பயன்படுத்துகின்றனர். இதன் விதைகளைக் கொண்டு தேநீர் செய்து குடிக்கின்றனர். ஓமத்தால் ஏற்படும் உடல் நல நன்மைகள் என்ன என்று  பார்க்கலாம்.

வாயு வெளியேற்றம்:
வாயு பிரச்சனையிலிருந்து விடுபட 125 கிராம் தயிர், 2 கிராம் ஓமம், 1/2 கிராம் கருப்பு உப்பு, சேர்த்து சாப்பிட்டால் வாயு  சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் எளிதில் நீக்கி விடும் தன்மை கொண்டது. இதை மதிய உணவிற்கு பிறகு 10 முதல் 15 நாட்களுக்கு  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விக்கல், குமட்டல், உளறுதல் மற்றும் அஜீரணம் ஆகிய பிரச்சனைகளை தீர்க்கும்

செரிமானக் கோளாறு: சரியான முறையில் செரிமானம் ஆகாததால் செரிமானக்கோளாறு ஏற்பட்டு குடலில் புண் ஏற்படும். இந்த பிரச்சனைகளை  தவிர்க்க சாப்பிட்ட பிறகு ஓமத்தை எடுத்து வாயில் போட்டு மென்று கொள்வதால் செரிமான பிரச்சனைகளை தீர்க்க முடியும்..

ஈறுகளில் வீக்கம்: ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு இருந்தால் ஓம எண்ணெய் ஒரு துளி அளவு சேர்த்து சில நிமிடங்களுக்கு பின் வாயில் ஊற்றி 5  நிமிடத்திற்கு பின் அலசிவிடவேண்டும். இப்படி செய்வதால் வாய் நாற்றம், ஈறுகளில் ஏற்பட்ட வீக்கம் அனைத்திலிருந்தும் நிவாரணம் பெறலாம்.

மூட்டு வலிகள்: ஓம(ணீழீஷ்ணீவீஸீ) எண்ணெய்யை கடுகு சேர்த்து சுடவைத்து மூட்டுவலி உள்ள இடங்களில் மஜாஜ் செய்வது போல நன்கு  தடவினால் மூட்டுவலிக்கு தீர்வு காணலாம்.

வலி மற்றும் காயங்கள் : ஓம விதைகளுடன் தண்ணீர், மஞ்சள் சேர்த்து பேஸ்ட் போல செய்து காயங்கள் ஏற்பட்ட இடத்தில் போட வலி மற்றும்  வீக்கங்கள் குணம் பெறும்.

வயிறு வலி: வயிற்று வலியால் அவதிப்படுவோர் சூடான தண்ணீரில் மிளகு 1 தேக்கரண்டி, ஓமம் 1 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால்  வயிற்றுவலி குணமாகும். அரிப்பு, படை, எக்ஸிமா போன்றவைகளுக்கு கொதிக்கும் தண்ணீரில் ஓமத்தைப்போட்டு வெந்ததும் அதை பேஸ்ட்டாக  செய்து அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவ வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் ஏற்படும் பருக்களிலும் தடவலாம்.வ்

நல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்

தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன்- மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும் முக்கியம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

எந்த சந்தர்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது.

சாப்பிட்டதும், உடலுறவை வைத்துக்கொள்ளக் கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால் , செயல்பாடுகளில் ஆர்வம் கட்ட முடியாது.

உறவுக்கு முன், இனிமையான உரையாடலும், உணர்வு பரிமற்றலும், முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும்.

தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். ஆவேசமும், அவசரமும் காட்டினால் தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும்.

கோபம், சண்டையைத் தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸ்க்கு உண்டு. ஆனால், மன மன ஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையைத் தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும், அழ்ந்த மன பாதிப்புகள் தம்பதிய உறவுக்குப் பெரும் எதிரியாகும்.

தாம்பத்தியத்தில் ஒரே மாதிரி செயலாற்றும் இயந்திரத் தனங்கள் இனிமை தராது. அதே நேரத்தில் அளவுக்கு மீறிய எல்லை எல்லா மீறல்களும் சிகல்களில் விட்டுவிடும்.

மனமும் உடலும் ஒத்துழைக்கும்  வரை  அடிக்கடி உளவு கொள்ள முடியும் என்றாலும், தம்பதிகள் தங்களுக்கும் சில கட்டுப்பாடுகள்  விதித்துக்கொண்டல், உறவு பற்றி ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்து இன்பம் அடைய முடியும்.

வயது அதிகரித்ததும், குழந்தை வளர்ந்ததும் தம்பதிய உளவு கொள்வது பாவம் என்று நினைக்கத் தேவையில்லை. இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடையில்லை.

கணவன் மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்து கொள்ள வேண்டும்.

செக்ஸில்எதுவுமே தவறில்லை என்பதால் இப்படிப் பேசினால் அநாகரிகம், அப்படிச் செய்தால் அநாகரிகம் என்று என்ன தேவையில்லை. படித்தவர்கள், நல்ல வேளையில் இருப்பவர்கள் இது போன்று எல்லாம் செய்யக்கூடாது என்று தங்களுக்குள் கட்டுப்பாடு விதித்துக் கொள்ளக்கூடாது. இருவரது விருபங்களில் ஆரோக்கியமான அனைத்துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்கை நெறிப்படி சரியானதுதான்.

தாம்பத்தியம்  ஒரே அலைவரிசையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதில்லை. ஆணுக்கும் அடிக்கடி ஏற்படும் என்றாலும், பெண்ணுக்குத் தொல்லை தரக் கூடாது என்று அடக்குபவர்கள் அதிகம். இதை மனிவி புரிந்து கொள்ளாத  பட்சத்தில், மனைவி மீது வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. எனவே ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க வேண்டும்.

அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு. அவர்களது விருப்பத்தை ஆண்கள் உதாசினப்படுத்தாமல் முடிந்தவரை நிறைவேற்ற முயற்ச்சிக்க வேண்டும். செக்ஸ் இணைய தளங்களை பார்ப்பது, செக்ஸ் புத்தகத்தை படிப்பது, சிடி பார்ப்பது போன்றவை என்றாவது ஒருநாள் என்றல் ஏற்றுக்கொள்ள கூடியதே. ஆனால், அது இல்லாமல் உறவு கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தம்பதிகள் தெளிவாக இருக்கவேண்டும்.

தம்பதிய உளவை அதிகரிக்கும் சக்தி கீரை மற்றும் பலன்களுக்கு உண்டு. மீன் புறா வெள்ளாட்டுக்கறி இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரிச்சம்பழம், பாதம் பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் - பெண் உறவுக்கு வலிமையும் இனிமையும் சேர்க்கக் கூடியவை.

ஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா ?

கலவியில் ஆண்கள்தான் அகோர செக்ஸ் பசி கொண்டவர்கள், அடக்க முடியாத செக்ஸ் விருப்பம் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அதை விட பலமடங்கு வேகம் கொண்டவர்கள் பெண்கள்தான் என்று ஒரு புது நூலில் ஆய்வுப் பூர்வமாக கூறியுள்ளனர்.

மேலும் செக்ஸ் விஷயத்தில் பெண்களிடம் விலங்குகளின் குணம் இருப்பதாகவும், அடங்காத பெரும் பசி கொண்டவர்கள் பெண்கள் என்றும் அந்த நூல் கூறுகிறது. அறிவியல் பூர்வமான ஆய்வின் மூலம் இந்த முடிவுகளை வெளியிடுவதாகவும் அந்த நூலில் தெரிவித்துள்ளனர்.

ஆண்களை விட சக்தி ஜாஸ்தி

பெண்களின் செக்ஸ் உணர்வானது ஆண்களுக்கு சற்றும் குறைந்ததில்லை என்பது இந்த நூலின் ஆசிரியர் டேணியல் பெர்க்னரின் வாதமாகும். ஆண்களை விட அதிக அளவிலான செக்ஸ் சக்தி கொண்டவர்கள் பெண்கள் என்று கூறுகிறார் டேணியல்.

கலாச்சாரம் தடுக்கிறதே

ஆண்களை விட அதிகஅளவிலான உணர்ச்சிகளையும், ஆசையையும் கொண்டிருந்தாலும் பெண்கள் அமைதியாகவும், அடக்கமாகவும் தங்களது ஆசைகளை வைத்துக் கொள்வதற்கு அவர்கள் சார்ந்த சமூகத்தின் கலாச்சாரக் கட்டுப்பாடுகள் தடுப்பதாகவும் கூறுகிறார் டேணியல்.

விலங்குகளை விடஅதி வேகம் கொண்டவர்கள்

செக்ஸ் விஷயத்தில் வேகம் எடுக்க பெண்கள் முடிவு செய்துவிட்டால் விலங்குகளை விட அதி வேகமாக செயல்படுவார்களாம். அதி தீவிரமான செக்ஸ் வேட்கையையும் செயல்பாட்டையும் வெளிப்படுத்துவார்களாம்.

ஆண்களால் தாங்க முடியாது

பெண்கள் தங்களது செக்ஸ் இச்சையை தீர்க்க முழுமையாகவும், தீவிரமாகவும் களம் இறங்கி விட்டால் அதைத் தாங்க முடியாமல் ஆண்கள் துவண்டு போய் விடுவார்கள் என்றும் டேணியல் பீதி கிளப்புகிறார்.

அடக்கப்பட்ட உணர்ச்சிகள்

பெண்களைப் பொறுத்தவரை சமூகத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக உள்ளனர். தாங்கள் சார்ந்த கலாச்சாரம் குறித்து பயப்படும் நிலையில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களின் செக்ஸ் உணர்ச்சிகள் அடக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அல்லது தங்களது கலாச்சார, சமூக நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் நிலைக்குப் பெண்கள் தள்ளப்படுகின்றனராம்.

முழுசா வெளிப்பட்டால்

பெண்களின் செக்ஸ் ஆர்வத்தையும், வேட்கையையும், விலங்குகளுன் ஒப்பிடுகிறார் டேணியல். காரணம், விட்டால் அல்லது வாய்ப்பு கிடைத்தால் அந்த அளவுக்கு அதி தீவிரமாகவும், வேகமாகவும் செயல்படுவார்களாம் பெண்கள். மேலும் அடங்காப் பசி என்று சொல்லும் அளவுக்கு எத்தனை முறை ஈடுபட்டாலும் பெண்களின் செக்ஸ் பசி அடங்காத ஒன்றாகும் என்றும் டேணியல் சொல்கிறார்.

நடப்பு வேறு.. உண்மை வேறு

தற்போது பெண்கள் வெளிப்படுத்தி வரும் செக்ஸ் உணர்வுகள் நிஜமானவை அல்ல.உ ண்மையில் அவை அடக்கப்பட்டவை. நிஜத்தில் பெண்கள் விஸ்வரூபம் எடுத்தால் மிகப் பிரமாண்டமானதாக இருக்கும் என்பதும் டேணியலின் கூற்றாகும்.

கை மருத்துவத்தில் சிறந்தது சுக்கு

சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர  மூட்டுவலி முற்றிலும் குணமாகும். சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி,  சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர,  ஆரம்பநிலை வாதம் குணமாகும். சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும். சுக்குடன், தனியா வைத்து சிறிது  நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும். சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப்  பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும். சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று  தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும். சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல்  இயல்பு நிலைபெறும்.

சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும். சுக்குடன்,  கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும். சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர்  குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும். தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு  சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும். சுக்கு , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு  நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

வயிற்றில் உள்ள கிருமிகளால் குழந்தை வளர்ச்சி பாதிக்குமா?

 எண்டோஸ்கோபி சிகிச்சையைப்பற்றிய கேள்விகளுக்கு கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் பதில் அளிக்கிறார்.

அஜீரணக்கோளாறுக்கும் வயிற்றுவலிக்கும் தொடர்புள்ளதா?
வயிற்றில் புண் இருந்தால் அஜீரணக்கோளாறு ஏற்படும். வலியானது மேல் வயிற்றிலிருந்தால் புண்ணினால் ஏற்படும் வலியாக இருக்கக்கூடும். அடிவயிற்று வலியாக இருந்தால் வேறு ஏதேனும் பிரச்னையாக இருக்கக்கூடும். உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

வயிற்றில் உள்ள கிருமிகளால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுமா?

ஆம். வயிற்றிலுள்ள கிருமிகள் குழந்தைகள் உண்ணும் உணவிலிருக்கும் சத்து மற்றும் வைட்டமின்களை உறிஞ்சிவிடும். அதனால் குழந்தைகளின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். எனவே, குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக மருத்துவ ஆலோசனையின்படி பூச்சி மருந்து கொடுக்க வேண்டும். கை, கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வெளியூரில் பணியாற்றி வருகிறேன். 3 வேளையும் ஓட்டல்களில் காரசாரமாக சாப் பிட்டு வருகிறேன். வயதான காலத்தில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளதா?

ஓட்டல்களில் உபயோகிக்கப்படும் ஏற்கனவே உபயோகித்த எண்ணெய், சுத்தமில்லாத மசாலா மற்றும் சுகாதாரமில்லாமல் சமைக்கப்படும் உணவுப்பொருட்களை அடிக்கடி உண்ணும்போது வயிற்றில் புண் மற்றும் கேன்சர் உருவாக வாய்ப்பிருக்கிறது. எனவே, வீட்டு முறைப்படி சமைக்கும் உணவகத்திலோ அல்லது முடிந்தால் நீங்களாகவே சமை த்தோ உண்பது நல்லது.

கோதுமை சப்பாத்தியை விட மைதா ரொட்டி குடலுக்கு ஆபத்தா?

கோதுமை உடலுக்கு நல்லது. மைதாவை அடிக்கடி உண்பதால் கணையத்தை பாதிக்க வாய்ப்பிருக்கிறது. சில சமயங்களில் வயிறு உப்பிக்கொள்ளும். எனவே மைதா உணவை அடிக்கடி உண்பதை தவிர்ப்பது நல்லது.

குடல் இறக்கம் குழந்தைகளுக்கு வர வாய்ப்பிருக்கிறதா?

குடல் இறக்கம் குழந்தைகளுக்கும் ஏற்படுவதுண்டு. நாட்களை தள்ளிப்போடாமல் சிறு வயதிலேயே அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்வது நல்லது.
குடற்புண்கள் ஆற கீரை வகை நல்லதா? பழங்கள் நல்லதா?

இரண்டுமே நல்லது தான். சுக்கட்டி கீரை போன்ற அனைத்து கீரை வகைகளும் நல்லது. குடற்புண் உள்ளவர்கள் பழங்களில் சிட்ரிக் அமிலங்கள் உள்ள பழங்களை தவிர்த்து மற்ற பழங்களை சேர்த்துக்கொள்ளலாம். ஏனென்றால் சிட்ரிக் அமிலம் உள்ள பழங்கள் புண்ணை அதிகப்படுத்தும்.
அசைவ உணவு செரிமானம் செய்வதற்காக மது அருந்தும் பழக்கம் சரியா? தவறா?


நம் வயிறு என்ன செத்த உடலை புதைக்கும் சுடுகாடா? வயிறே உன்னை ஆராதிக்கிறேன் என்று நம் வயிற்றிற்கேற்றாற்போல சைவ உணவை உண்பது தான் சிறந்தது. அசைவ உணவினால் புட் பாய்சன் போன்ற உபாதைகள் வருகிறது. எனவே அசைவ உணவே கெடுதல் விளைவிக்கும். அதிலும் மது அருந்துவது மிகவும் அதிகமான கெடுதலை விளைவிக்கும்.

புகையிலை, குட்கா பழக்கம் குடலை பாதிக்குமா?

புகையிலை, குட்கா மற்றும் பான்மசாலா போன்ற பொருட்களால் வாய், தொண்டை மட்டுமல்லாமல் குடலையும் பாதிக்கும். சில சமயம் கேன்சர் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

சிறுகுடலை விட பெருங்குடல் நீளமானதா?

ஆம். சிறுகுடலை விட பெருங்குடல் நீளமானது தான். சிறுகுடலானது வயிற்றிலிருந்து டியோடினம் என்னும் பகுதிவரை உள்ளது. அதற்குப் பின் பெருங்குடல் உள்ளது.

பேதி மாத்திரைகள் உண்மையிலேயே குடலை சுத்தம் செய்கிறதா?

பேதி மாத்திரைகள் குடலை கழுவி சுத்தம் செய்கிறது. முன்பெல்லாம் பேதி மாத்திரை குடலிலுள்ள பொருட்கள், கிருமிகள் அனைத்தையும் வெளியேற்றி சுத்தப்படுத்தும். ஆனால், தற்போது வயிற்றிலுள்ள கிருமிகளை கொன்று பின்பு அனைத்தையும் வெளியேற்றுகிறது.

துணையை கவரும் மசாஜ் விளையாட்டு

உடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்ய விளையாட்டினை ஆர்வமாக விளையாட முடியும். எந்த சிக்கலும் இன்றி ரிலாக்ஸ் ஆக இருக்க முதலில் அதற்கேற்ப மூடுக்கு கொண்டுவரவேண்டும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்வதில் மசாஜ் முக்கிய பங்கு வகிக்கிறது. மசாஜ் மூலம் உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு செல்லையும் உணர்ச்சியூட்ட முடியும். மசாஜ் செய்வது சாதாரணமாக எல்லோருக்கும் கைவந்து விடாது அது ஒரு கலை அதை எவ்வாறு கையாளவேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர் படியுங்களேன்.

மென்மையான படுக்கை

இரவோ, பகலோ உறுத்தல் இல்லாத மென்மையான வெளிச்சத்தில் படுக்கை அறை இருக்கவேண்டும். அதில் யாருக்கு மசாஜ் தேவையோ அவர்களை ரிலாக்ஸ் ஆக படுக்கவைத்து உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொள்ளுமாறு செய்துவிட்டு தேவையற்ற ஆடைகளை களையுங்கள். பஞ்சு மெத்தையைவிட தண்ணீர் படுக்கை இருந்தால் மசாஜ்க்கு மிகவும் ஏற்றது. கழுத்து, முழங்கால், உள்ளிட்ட இடங்களில் சற்றே தூக்கலாக தலையணையை வைத்துவிடுங்கள்.

வாசனையான எண்ணெய்

மசாஜ் செய்வதற்கு சிலர் வாசனை எண்ணெயை பயன்படுத்துவார்கள். சிலர் வெறும் கையையே பயன்படுத்தி உணர்ச்சியை உற்சாகமாக தூண்டுவார்கள். எண்ணெயை மெதுவாக சூடு படுத்திவைத்துக்கொள்வது நல்லது. அது தசைப்பிடிப்பையும், அழுத்தத்தையும் நீக்கும்.

மென்மையான இசை

படுக்கை அறையில் மெல்லிய வெளிச்சம் எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல மென்மையான இசையை கசிய விடுங்கள். அது இருவரையுமே உற்சாகப்படுத்தும்.

சரியாக தொடங்குங்கள்

எந்த ஒரு செயலையும் சரியாக தொடங்கினாலே பாதி வெற்றி கிடைத்துவிடும். மசாஜ் செய்வதும் அப்படித்தான் எங்கே தொடங்கி எப்படி முடிக்கிறோம் என்பதில்தான் வெற்றியின் சூட்சுமமே இருக்கிறது. மென்மையான கைகள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் துணைக்கு தலையில் தொடங்குவது பிடிக்கும் எனில் உச்சந்தலையில் இருந்து தொடங்குங்கள். கால்களில் தொடங்குவது வசதி எனில் கால்களில் இருந்து மென்மையாய் ஆரம்பியுங்கள். பின்னர் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக போகஸ் செய்து மென்மையாக பிடித்து விடுங்கள். உடம்பின் ஒவ்வொரு செல்லும் உங்களின் மென்மையை உணரவேண்டும். வேறு எதுவும் வேண்டாம். நீங்கள் மசாஜ் செய்வதே உங்கள் துணையை ஆகாயத்தில் பறக்கச் செய்யும்.

சரியாக சொல்லுங்கள்

தோள் பட்டை பகுதியிலோ, முதுகுப் பகுதியிலோ கூடுதலாக மசாஜ் செய்யவேண்டும் என்று விரும்பினால் அதை உங்கள் துணையிடம் கூறலாம். அந்த இடத்தில் வலி இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று சொல்லுங்கள். முதுகுப் பகுதியில் மசாஜ் செய்யும் போது துணையின் மீது ஏறி அமர்ந்து கூட செய்யலாம் அது கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

மசாஜ் செய்வது சாதாரணமாக எல்லோராலும் செய்து விட முடியாது அதற்கென நிபுணர்கள் இருக்கின்றனர். மசாஜ் பார்லர்களும் இருக்கின்றன. அங்கெல்லாம் சென்றால் செலவு பழுத்துவிடும் சரியான சுகமும் கிடைக்காது. எனவே வீட்டிலேயே உங்கள் துணையிடமே மசாஜ் செய்து கொள்வதுதான் செலவில்லாததும், பாதுகாப்பானதும் கூட என்கின்றனர் நிபுணர்கள்.

பழைய சாதத்தில் பலம் இருக்கு

முதல் நாள் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு மறுநாள் நாம் சாப்பிடும் இந்த பழைய சாத்தில் தான் பி6 பி12 அதிகமாக இருக்கிது என் கூறுகின்றனர்  அமெரிக்க மருத்துவர்கள். குறிப்பாக நமது உடலின் சிறுகுடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் அதிகமாகி நமது உணவுப்  பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்.

பொதுவாக கிராமத்தில் கஞ்சி சாப்பிடும்போது கஞ்சியுடன் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவது தான் வழக்கம். சிறிய வெங்காயத்தை சேர்த்து  சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதால் வைரஸ் காய்ச்சல் என எந்த ஒரு காய்ச்சலும் நம்மை அணுகாது. பழைய சாதத்தில் என்ன பயன்  இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.

இரவு வேளையில் தண்ணீர் ஊற்றி வைப்பதால் சாதத்தில் அதிகளவு நல்ல பாக்டீரியாக்கள் உருவாகுகிறது. இதனை காலை வேளை உணவாக  எடுத்துக்கொள்வதால் உடல் லேசாகவும் அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. மேலும் உடல் சூட்டை தணிப்பதோடு குடல்புண், வயிற்றுவலி,  போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.. இந்த பணியோடு நின்றுவிடாமல் நார்ச்சத்து, மலச்சிக்கல், பிரச்சனைகளை தீர்த்து உடலை சீராக இயங்கச்  செய்கிறது..

உடலை சோர்விலிருந்து மீட்டு சுறுசுறுப்பாக இயங்கச்செய்யும். அதற்காக சூடாக தயாரித்த சாதத்தில் தண்ணீரை ஊற்றி சாப்பிடக்கூடாது. முதல் நாள்  இரவு மீந்த சோற்றை எடுத்து நல்ல தண்ணீர் ஊற்றி முடிவிட வேண்டும். மறுநாள் சாப்பிடும் முன் சாதத்தை நன்கு பிழிந்து மோர் சேர்த்து வெங்காய்  வைத்து சாப்பிடலாம்.